Audi Kritikai Holiday 2024
விடுமுறை : ஆடி கிருத்திகை முன்னிட்டு ஜூலை 29 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Audi Kritikai Holiday 2024 : ஜூலை 29ஆம் தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை விழாவானது வருகிற ஜூலை 29ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.
இதனை ஒட்டி திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஆடி கிருத்திகை
திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூலை 29ஆம் தேதி ஆடி கிருத்திகை ஒட்டி விடப்படுகின்ற இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்வதற்காக ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை ஆனது வேலை நாட்களாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த உள்ளூர் விடுமுறையானது வங்கிகளுக்கு பொருந்தாது அஞ்சல் அலுவலகங்களுக்கு பொருந்தாது.
தமிழகம் முழுவதும் ஆடி கிருத்திகையானது ஜூலை 29ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது இந்த நாட்களில் முருகனுக்கு காவடி எடுக்கும் நிகழ்வானது நடைபெறும் ஜூலை 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பக்தர்கள் பரணி காவடி எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.