இல்லம் தேடி கல்வி திட்டம் நிறுத்திவைப்பு?- வெளியான முக்கிய தகவல்!! Illam Thedi Kalvi Scheme Latest Update June 14

இல்லம் தேடி கல்வி திட்டம் நிறுத்திவைப்பு?- வெளியான முக்கிய தகவல்!!

Illam Thedi Kalvi Scheme Latest Update June 14

Illam Thedi Kalvi Scheme Latest Update June 14 இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகளை இந்த கல்வியாண்டு தொடர்வது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து வெளியான செய்தி தொகுப்பை கீழ்க்கண்டவற்றில் காணலாம்.

Illam Thedi Kalvi Scheme Latest Update June 14
Illam Thedi Kalvi Scheme Latest Update June 14

கொரோனா கால கட்டத்தில் மாணவர் கல்வித்தரம் மேம்படுத்தவும், கற்றல் இடைவெளியை குறைக்கவும், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், 2021ல் துவங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம் கற்றுத்தருவதுடன், ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் என களை கட்டியதால், பெற்றோர், குழந்தை மத்தியில் இம்மையங்கள் வரவேற்பை பெற்றன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

ஒவ்வொரு மாவட்டத்திலும், 8 ஆயிரம் முதல், 11 ஆயிரம் பேர் வரை மாநிலம் முழுதும், 2.10 லட்சம் தன்னார்வலர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து வகுப்புகளை நடத்தி வந்தனர். இந்தக் கல்வியாண்டு துவங்கி ஒரு வாரம் நிறைவு பெற உள்ள நிலையில், ‘இல்லம் தேடி கல்வி’ திட்ட வகுப்புகளை துவங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:

கொரோனா கால கட்டம் முடிந்து விட்டது; தன்னார்வலர்களில் சிலர் ஆக்கபூர்வமாக பணியாற்றினாலும், ஒரு சிலர் வகுப்புகள் நடத்தாமல், ஏற்கனவே எடுத்து வைத்த போட்டோக்களையே பதிவேற்றம் செய்கின்றனர். இதுவரை திறம்பட பணியாற்றியவர்கள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் மாற்றுப்பணி வழங்கப்பட உள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து, அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தல் வந்தால், அது குறித்து தெரிவிக்கப்படும். தற்போதைக்கு மையங்களை திறக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

Leave a Comment