வட்டியே இல்லாமல் 5 லட்சம் வரை கடன் பெறலாம்!- மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! PM Lakpathi Didi Yojana Scheme Full Details 2024 Happy News

வட்டியே இல்லாமல் 5 லட்சம் வரை கடன் பெறலாம்!- மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

PM Lakpathi Didi Yojana Scheme Full Details 2024

PM Lakpathi Didi Yojana Scheme Full Details 2024 பெண்கள் நலனைக் கவனத்தில் கொண்டு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முக்கியமான ஒன்று லக்பதி திதி திட்டம். பெண்களுக்கு பல்வேறு திறன்கள் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுவதுடன் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

PM Lakpathi Didi Yojana Scheme Full Details 2024
PM Lakpathi Didi Yojana Scheme Full Details 2024

மத்திய அரசு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி லக்பதி திதி திட்டத்தைத் தொடங்கியது. பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் மகளிருக்குத் தொழில் பயிற்சியுடன் புதிய தொழில் தொடங்க நிதியுதவியும் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

திறன் பயிற்சியுடன் தொழில் தொடங்கி நடத்துவது பற்றி வணிக ஆலோசனைகளைப் பெறவும் உதவுகிறது. நிதி மேலாண்மை, சந்தைப்படுத்துதல், ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான வழிகாட்டலும் கிடைக்கும். இதுவரை இந்தத் திட்டத்தின் மூலம் 9 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நீங்கள் கால்நடை, மளிகை கடை, பெட்டிக்கடை போன்ற சிறு தொழில்கள் செய்யக்கூடியவர்களாக இருந்தால் நீங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்கள் ஏதேனும் பொருட்களை இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்தால் உங்களுக்கு அதற்கான உரிமம் பெற்று தரப்படும். லக்பதி தீதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்களது வருமானம் ஆண்டுக்கு

லக்பதி திதி திட்டத்தில் சேர எளிதாக விண்ணப்பிக்கலாம். 18 முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம். சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் தான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகத்திற்குச் சென்று லக்பதி திதி திட்டத்திற்கான படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

PM Lakpathi Didi Yojana Scheme Full Details 2024

லக்பதி யோஜனா திதி திட்டத்தின் மூலமாக நாம் எவ்வாறு கடன் பெறுவது 

இத்திட்டத்தை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றால் லக்பதி யோஜனா திதி என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதுவே நாம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

லக்பதி யோஜனா திதி திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்

  • ஆதார் கார்டு
  • ரேஷன் கார்டு
  • வங்கி கணக்கு புத்தகம் 
  • சுய உதவிக் குழு உறுப்பினர் சான்றிதழ் உள்ள ஆவணங்கள் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே இத்திட்டத்தில் விண்ணப்பித்து வட்டி இல்லா கடனை பெற்று வாழ்க்கையில் முன்னேறுங்கள். மத்திய அரசின் இந்த திட்டம் அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்க இப்பதிவு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment