Breaking News: நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்!- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!! Separate Resolution Against NEET Exam CM Assembly June 28

நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்!- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

Separate Resolution Against NEET Exam CM Assembly

Separate Resolution Against NEET Exam CM Assembly நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என நீட் தேர்வு முறைகேடு, நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.

Separate Resolution Against NEET Exam CM Assembly
Separate Resolution Against NEET Exam CM Assembly

நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக ஆகிவிட்டது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

பல ஆண்டுகாலமாக நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகமும், தமிழக மக்களும் தனியே போர்த் தொடுத்து வந்த நிலையில், நீட் தேர்வின் உண்மையான அவலங்களை உணர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

தமிழகத்தின் குரல், இந்தியாவின் குரலாக எதிரொலிப்பதை அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே முடிவெடுத்த பழைய நிலையே மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கே கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது.

-நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Leave a Comment