ஈஸியா புதிய ரேஷன் கார்டு பெற வேண்டுமா?.. இந்த வழிமுறைகளை மட்டும் பின்பற்றினாலே வாங்கலாம்!.. TN New Ration Card Easy Way To Apply July 14

ஈஸியா புதிய ரேஷன் கார்டு பெற வேண்டுமா?.. இந்த வழிமுறைகளை மட்டும் பின்பற்றினாலே வாங்கலாம்!!

TN New Ration Card Easy Way To Apply July 14

TN New Ration Card Easy Way To Apply July 14 புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் என்ன எந்த இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதைப் பற்றிய முழு தகவல் உங்களுக்கு கிடைக்கப் போகிறது கீழே உள்ள தகவல்களை முழுமையாக படித்துப் பார்க்கவும்.

TN New Ration Card Easy Way To Apply July 14
TN New Ration Card Easy Way To Apply July 14

நாட்டில் உள்ள அனைவருக்கும் அத்தியாவசிய அடையாள அட்டைகளில் மிகவும் முக்கியமான அட்டை ரேஷன் கார்டு குறிப்பாக இந்த ரேஷன் கார்டு வைத்து தான் அரசின் அனைத்து சலுகை திட்டங்களையும் பெற முடியும் அந்த வகையில் தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற எளிய முறையில் எவ்வாறு விண்ணப்பிப்பது எந்த அலுவலரை அணுக வேண்டும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

தேவையான ஆவணங்கள் என்ன ஆவணங்கள் ஏதும் இல்லாமல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்று பல்வேறு சந்தேகங்கள் பலருக்கு இருந்து வருகின்றது எந்த அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கும் செய்தி தொகுப்பை விரிவாக நாம் இப்போது பார்க்கலாம். முதலில் நீங்கள்புதிய ரேஷன் கார்டு எளிய முறையில் நீங்களே விண்ணப்பிக்கலாம் அதாவது விண்ணப்பிக்க, முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்  இப்போது திரையில் ஒரு படிவம் தோன்றும்.

அந்த படிவத்தை பயனாளிகள் நிரப்ப வேண்டும். அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர், அதனுடன் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 MB அளவிலும், png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மெட்டிலும் இருத்தல் வேண்டும்.

பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது போன்ற தகவல்களை வழங்க வேண்டும்
பின்னர் நீங்கள் ‘உறுதிபடுத்து’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு (reference) எண் கிடைக்கும், அதை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து, நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்ப்பார்கள்.  சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். ரேஷன் கார்டு படிவம் சரிபார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், தேவையான ஆவணங்களை கேட்டறிந்து சமர்பிக்க வேண்டும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை,  மின் ரசீது,  பான் கார்டு,  பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
வருமான சான்றிதழ்,  வங்கி பாஸ்புக்,  சாதி சான்றிதழ் ஆகியவை ஆகும்.

புதிதாக திருமணம் ஆனவர்கள் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் தங்களது பெயரை நீக்கம் செய்துவிட்டு அதன் பின்னர் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் ஆதார் அப்டேட் செய்த பின்னர் ஆதார் அட்டையை ஆவணமாக பயன்படுத்தி புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க முடியும்.

Leave a Comment