தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எப்போது? விடுமுறை நாட்கள் அறிவிப்பு வெளியீடு!..
TN Quarterly Exam Time Table 2024 And Leave News
TN Quarterly Exam Time Table 2024 And Leave News தமிழக பள்ளி மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. எப்போது காலாண்டு தேர்வு என்பதை குறித்து முக்கிய அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2024 -25 ஆம் கல்வி ஆண்டிற்கான காலாண்டு தேர்வானது எப்போது நடைபெறும். பின்னர் விடுமுறை எத்தனை நாட்கள் விடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை குறித்து முழு தகவலை இந்த செய்தி தொகுப்பில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
![TN Quarterly Exam Time Table 2024 And Leave News](https://bossnewzmedia.com/wp-content/uploads/2024/08/TN-Quarterly-Exam-Time-Table-2024-And-Leave-News-1024x576.png)
காலாண்டு தேர்வானது முதல் காலாண்டில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து வினாத்தாள் தயாரிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அளவில் மேற்கொண்டு பிரத்தியேக ஆசிரியர்கள் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் ஒன்றிணைந்து வினாத்தாளை தயாரிப்பார்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
வருகின்ற செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வானது நடத்தப்பட உள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் காலாண்டு தேர்வானது நடத்தப்பட உள்ளது.
இந்த காலாண்டு தேர்வில் ஒரு வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும். எனவே செப்டம்பர் 28ஆம் தேதி வரை காலாண்டு தேர்வானது நடத்தப்படும்.
காலாண்டு தேர்வு முடிந்தவுடன் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறையானது தொடங்கப்படும்.
செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறையானது விடப்படுகிறது.
எனவே இச்செய்தி மாணவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.