TNPSC குரூப் 4 கட் ஆப் எப்படி இருக்கும்!..- வெளியான மகிழ்ச்சி தகவல்!!
TNPSC Group 4 Cut OFF 2024 Expected Latest Update
TNPSC Group 4 Cut OFF 2024 Expected Latest Update டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் ஆனது குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எவ்வளவு கட் ஆப் வரை வேலை கிடைக்கும் என்பதை குறித்து நாம் இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது அமைச்சுப் பணிகள் வாரியங்கள் வனப்பணி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கின்ற நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வை சென்ற ஜூன் 9-ம் தேதி நடத்தியது. இதில் மொத்தம் 6244 பணிடங்களுக்கு இந்த தேர்வானது நடத்தப்பட்டது. இந்த தேர்வு மூலமாக கிராம நிர்வாக நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ,வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
எனவே இந்த நிலையில் இந்த ஆண்டுக்கு குரூப் 4 தேர்வு கட் ஆப் எப்படி இருக்கும் என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் .இங்கு கட் ஆப் எனக் குறிப்பிடப்படுவது 300 மதிப்பெண்களுக்கு அல்லாமல் 200 கேள்விகளுக்கு எத்தனை சரியான கேள்விகள் என்பதே.
TNPSC Group 4 Answer Key 2024 Download
இந்த பதிவில் அறிவுசால் அகடாமி வெளியிட்டுள்ள வீடியோவின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 173
பி.சி – 172
எம்.பி.சி – 172
பி.சி.எம் – 165
எஸ்.சி – 169
எஸ்.சி.ஏ – 167
எஸ்.டி – 160
தட்டச்சர் பணிகளுக்கான எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 170
பி.சி – 168
எம்.பி.சி – 168
பி.சி.எம் – 152
எஸ்.சி – 164
எஸ்.சி.ஏ – 160
எஸ்.டி – 153
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இதிலிருந்து ஒரு மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், கட் ஆஃப் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2024- கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் Click