TNPSC/ TRB மூலம் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்ப முதல்வர் அதிரடி அறிவிப்பு!! TNPSC TRB 46584 Vacancy Filled CM Order Happy News

TNPSC/ TRB மூலம் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்ப முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

TNPSC TRB 46584 Vacancy Filled CM Order

TNPSC TRB 46584 Vacancy Filled CM Order தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகின்ற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு உள்ளாக 46 ,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.

TNPSC TRB 46584 Vacancy Filled CM Order
TNPSC TRB 46584 Vacancy Filled CM Order

அடுத்த 18 மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 பணியிடங்களும் 17595 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் ,தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6688 பணியிடங்களும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3041 பணியிடங்கள் என மொத்தமாக 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

இதை தவிர சமூக நலத்துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30,219 அரசு பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவற்றை மொத்தமாக சேர்த்து பார்க்கையில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் வருகின்ற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என அறிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் பேசிய மு க ஸ்டாலின் அவர்கள் “அடுத்த தேர்தலை பற்றி யோசிக்கும் அரசு இல்லை அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் அரசு இது கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  5.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Official CM Notification

Leave a Comment