தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனங்களின் கட்டணம் தேர்தலுக்கு பின் 25% அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. எனவே தொலைத்தொடர்பு துறையில் BSNL, VI, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை முக்கிய பங்கு வகித்து வருகிறது.
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சிறந்த சேவையை வழங்கி வருகிறது. இதில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
தேர்தலுக்கு பின் மொபைல் போன் கட்டணம் 25% உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
5G முதலீட்டைத் தொடர்ந்து லாபத்தை மேம்படுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ஆக்சிஸ் கேபிட்டலின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.