தமிழ் வழி சான்றிதழ் கிடையாது இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு அரசு விளக்கம் PSTM Certificate 2024 latest Circular

PSTM Certificate 2024 latest Circular

தமிழ் வழி PSTM Certificate சான்றிதழ் கிடையாது? இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு! அரசு விளக்கம்

PSTM Certificate 2024 latest Circular : தமிழ் வழி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது முக்கிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் சில தனியார் கல்லூரியில் பட்டைய படிப்பினை தமிழ் வழியில் பயின்றதாக தமிழ் வழி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. எனவே அதற்கான விளக்கத்தை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கமானது வெளியிட்டுள்ளது அதன் முழு விவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
PSTM Certificate 2024 latest Circular
PSTM Certificate 2024 latest Circular

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் துறையின் பட்டய படிப்பு தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகள் கையேட்டில் பயிற்று மொழி ஆங்கிலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஸ்டேட் போர்டு ஆப் டெக்னிகல் எஜுகேஷன் State Board of Technical Education தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பலவகை தொடுப்ப கல்லூரிகளிலும் பட்டய படிப்பிற்கான பயிற்று மொழி “ஆங்கிலம்” மட்டுமே.

ஏப்ரல் மே 2011 ஆம் ஆண்டு பருவம் முதற்கொண்டு கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகள் பட்டய படிப்பு பட்ட மேற்படிப்பு படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று சான்றிதழில் அவர்கள் பயிலும் பயிற்று மொழியினை தமிழ் அல்லது ஆங்கில வழி என குறிப்பிடும் அறிவுரை வழங்கப்பட்டது.

மேற்படி அரசாணை வலுவலுக மேற்குறிப்பானை எண் 2011 நாள் 08.03.2011 அன்று மூலம் தொழில்நுட்ப கல்வி துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் மற்றும் பலவகை தொகுப்ப கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் பயிற்று மொழி குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் கல்வி பயின்ற வரை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் சட்டத்துக்கான 2020 ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.

இதர மொழிகளை பயிற்று மொழியாக கொண்டு பயின்று தேர்வுகளை மற்றும் தமிழில் எழுதியவர்கள் இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதி உடையவர்கள் அல்லர்.

மேலும் அரசாணையின் மூலம் 20223 ஆம் கல்வியாண்டு முதல் மைய பலவகை தொழில் நுட்ப கல்லூரி சென்னை, அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி கோயம்புத்தூர்,  அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி மதுரை, அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி நாகர்கோவில், ஆகிய 5 பலவகை தொழில் நுட்ப கல்லூரிகளில் அமைப்பியல் டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் மற்றும் இயந்திரவியல் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டய படிப்புகளை தமிழ் வழியில் பயிற்றுவிற்பதற்கு அனுமதி அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி அரசாணைகளின் படி தோளுட்ப கல்வி துறையின் பட்டய படிப்பு தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளின் படியும் பயிற்றுமொழி ஆங்கிலம் மட்டும் என்பதால் கல்வி ஆண்டு 2022-2023 ஆம் ஆண்டு முன்பு வரை சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வி சான்றிதழ் PSTM வழங்க வழிவகை இல்லை என தெரிவித்துக்கொள்வதுடன், இனிவரும் காலங்களில் தவறுதலாக தமிழ் வழி சான்றிதழ் வழங்கப்படுவது தெரியவரும் பட்சத்தில் கல்லூரி மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர் அறிவித்துள்ளார்.

முழுமையான அரசாணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PSTM Circular PDF TNDTE

Home Page

Leave a Comment