கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவருக்கு ஹாப்பி நியூஸ்!.. வெளியானது புதிய சலுகை!! LPG Online Booking Cash Back June 26 Happy News

கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவருக்கு ஹாப்பி நியூஸ்!.. வெளியானது புதிய சலுகை!!

LPG Online Booking Cash Back June 26

LPG Online Booking Cash Back June 26 இப்போதெல்லாம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG சிலிண்டர்) உள்ளது. அதன் விலைகளும் அவ்வப்போது மாறுகின்றன. ஆனால், எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. ஒருபக்கம், வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை பல ஆண்டுகளாக பெரிதாக மாற்றம் காணவில்லை.

LPG Online Booking Cash Back June 26
LPG Online Booking Cash Back June 26

ஆனால், வர்த்தக சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. மறுபுறம், கேஸ் சிலிண்டர்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வதன் மூலம் ஓரளவு பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது இன்னும் பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. சில பிளாட்ஃபார்ம்களில் ஆன்லைனில் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்து, உத்தரவாதமான கேஷ்பேக்கைப் பெறலாம். இந்த சலுகைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

10 சதவீத கேஷ்பேக் சலுகை:

எல்பிஜி சிலிண்டரை டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை வழங்கும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம். இதில் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். ஆனால் இந்த கேஷ்பேக்கை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.

தற்போது தலைநகர் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 803ஆக உள்ளது. ஆனால் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்து ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். அதாவது 14.2 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் ரூ.723க்கு வாங்கலாம்.

LPG Online Booking Cash Back June 26

முன்பதிவு செய்வது எப்படி?

முதலில் ஏர்டெல் தேங்க்ஸ் {AIRTEL THANKS APP} செயலியை உங்கள் மொபைலில் திறக்கவும். முகப்புப் பக்கத்தின் கீழே உள்ள PAY ஐகானைக் கிளிக் செய்யவும். இப்போது ரீசார்ஜ் & பே பில்கள் பிரிவில் புக் சிலிண்டர் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இதற்குப் பிறகு, Select Operator என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது Select ID விருப்பத்திற்குச் சென்று பயனர் எண் அல்லது மொபைல் எண் அல்லது சிறப்பு வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும். அடுத்து, Proceed என்பதைக் கிளிக் செய்யவும்.

இப்போது சிலிண்டருக்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை திரையில் காட்டப்படும், அதன் பிறகு, Pay Now விருப்பத்தை கிளிக் செய்யவும்.

ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தவும். இதன் மூலம் 10 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் உங்கள் ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.

Leave a Comment