BREAKING NEWS: ஜூலை 29 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!- வெளியான மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!!
Tiruvallur District School College Leave July 29
Tiruvallur District School College Leave July 29 திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வருகின்ற ஜூலை 29ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகனுடைய ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்வது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணியாகும் அங்கு அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர் .குறிப்பாக பல்வேறு மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இந்த நிலையில் ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் சுவாமிமலை பழனி திருத்தணி பழமுதிர்சோலை ஆகிய முருகனுடைய ஆறுபடை வீடுகளில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஆடிக்கிருத்துகையும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழாவானது நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆடி கிருத்திகை ஒட்டி ஜூலை 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது . உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை அலுவலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையானது வங்கிகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மாணவர்கள் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.