TNPSC குரூப் 4 தேர்வுக்கு சில நாட்களை உள்ளது.. கடைசி நேரத்தில்இவ்வாறு தயாரானால் கண்டிப்பா பாஸ்!!
TNPSC Group 4 Exam 2024 Easy Tips Revision
TNPSC Group 4 Exam 2024 Easy Tips Revision தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி ஆனது கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டது .அதில் டி என் பி எஸ் சி தேர்வாணையம் 6644 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை வருகின்ற ஜூன் 9-ம் தேதி நடத்தும் என்று அறிவித்திருந்தது.
குரூப் 4 தேர்வு பத்தாம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி என்பதால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் போட்டியிடுகின்றனர். எனவே ,போட்டியானது மிகக் கடுமையாக இருக்கும் என்கின்றனர் தேவர்கள் அதற்காக கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாலும் கடைசி நேரத்தில் அவற்றை எவ்வாறு படிக்க வேண்டும் தேர்வில் எப்படி நாம் செயல்படுத்த வேண்டும் என தெரியாமல் பலர் தோல்வி அடைந்து வருகின்றனர்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பாடத்திட்டம்
டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு ஆனது அனைத்து கேள்விகளும் அப்ஜெக்டிவ் வகையில் தான் இருக்கிறது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் ஆனது பகுதி அ இலக்கணம் பகுதி ஆ இலக்கியம் பகுதி இ பிரிவில் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் அதன் பின்னர் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படுகிறது. மேலும் பொது அறிவியல் நடப்பு நிகழ்வு புவியியல் இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு ஆகியவையும் இந்திய ஆட்சியில் இந்திய பொருளாதார ,இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு ,பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் ,தமிழகத்தில் வளர்ச்சி, நிர்வாகம், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் இந்த அடிப்படையில் தான் கேள்விக்கான பாடத்திட்டமானது அமைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தமிழ் மிக முக்கியம்
குரூப்-4 தேர்வு பொருத்தமட்டில் பொது தமிழ் கேள்விகளை நாம் தரவாக படித்துக் கொண்டது படித்துக் கொண்டால் மட்டுமே நிச்சயமாக இந்த தேர்வு வெற்றி கொள்ள முடியும் அதன் பின்னர் பொது அறிவு கேள்விகளையும் படித்துக் கொள்ள வேண்டும். முன்னுரிமையாக பொது தமிழில் நாம் அதிகப்படியான நேரத்தை ஒதுக்கி படித்து அதில் முழு மதிப்பை நாம் பெற்று விட்டாலே இத்தேர்வில் நாம் கட்டாயமாக வெற்றி பெற்று விடலாம்.
பொது தமிழ் ரிவிசன் கட்டாயம்
பொது தமிழ் பாடத்திலிருந்து நமக்கு 100 வினாக்கள் கேட்கப்படுகிறது. இந்த பகுதி நமக்கு எளிமையானது மற்றும் அதிக மதிப்பெண் எடுக்கக்கூடியது எனவே நீங்கள் ஏற்கனவே நன்றாக படித்து இருந்தாலும் திருப்புதல் பண்ணி கொள்வது மிகவும் அவசியம் .ஏனெனில் நான் படிக்காவிட்டால் தேர்வில் நாம் குழப்பம் அடைந்து தவறாக விடையளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதிகளை தினமும் கண்டிப்பாக திருப்பி திருப்பி படித்து வர வேண்டும். பின்னர் நாம் கட்டாயமாக தமிழ்மொழி பாடத்திட்டத்தில் 100 மதிப்பெண்களை பெற்று விடலாம்.
கணித மற்றும் பொது அறிவுவினாக்கள்
திறனறி வினாக்கள் மற்றும் கணித வினாக்களை தினமும் பயிற்சி செய்ய வேண்டும். மேலும் தினமும், ஒரு மாத நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும். கூடுதலாக பொது அறிவு பகுதிக்கு, சிலபஸில் கொடுக்கப்பட்டுள்ள படி ஒரு பாடத்தை திருப்பி படித்து வர வேண்டும். இதில் 8 (தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு) மற்றும் 9 (தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம்) ஆம் அலகுகளுக்கு (யூனிட்) கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். அடுத்ததாக அரசியலமைப்பு மற்றும் இந்திய தேசிய இயக்கம் பாடங்களை படிக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ரிவிஷன் செய்வது எப்படி?
ரிவிஷன் செய்வதற்கு ஏற்ற முறை குரூப் ஸ்டெடி (கூட்டாக படிப்பது) தான். எனவே முடிந்தவரை நன்றாக படிக்க கூடியவர்களுடன் சேர்ந்து ரிவிஷன் செய்வது சிறந்தது. ரிவிஷன் செய்யும்போது வரி, வரியாக படிக்க கூடாது, நீங்கள் ஏற்கனவே படித்துள்ளதால், முக்கியமானவற்றை மட்டும் படிக்க வேண்டும். அதிலும் தரவுகளாக படிக்க வேண்டும். அதேநேரம், உங்களுக்கு நன்றாக தெரிந்த தரவுகளை படிக்காமல், உங்கள் நினைவில் இல்லாத தரவுகளாக தேடித் தேடி படிக்க வேண்டும்.