சற்றுமுன்: மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வெளியான குட் நியூஸ்!..
Magalir Urimai Thogai Latest News 10 Aug
Magalir Urimai Thogai Latest News 10 Aug தமிழக அரசு அறிவித்த மிக முக்கிய திட்டமான மகளிர் உரிமை திட்டமானது பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்கள் சுயதொழில் செய்து தன் நிலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு ஆனது மகளிர் சுய உதவி குழு மூலமாக பல நூல்களை வழங்கி வருகிறது. இந்த கடன் தொகைக்கு மிக குறைந்த அளவை வட்டி மற்றும் மானியம் கிடைக்கிறது.
அதுபோன்று பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தமிழக அரசு மகளிர் உரிமை தொகையை பெண்களுக்கு மாதமாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இதன் மூலமாக பெண்கள் ஆண்களை நம்பி இருக்காமல் தங்களுடைய குடும்ப தேவைகளை இந்த பணத்தின் மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சென்ற ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதில் இந்த தொகையை பெறுவதற்கு பல பெண்கள் விண்ணப்பம் செய்தனர். அதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சுமார் 15 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் மாதம் மாதம் பெற்று வருகின்றனர். ஜூலை மாதம் மேலும் 2 லட்சம் பெண்களுக்கு மறு விண்ணப்பத்தின் மூலம் தொகை வழங்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 17 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
புதிய ரேஷன் அட்டை விண்ணப்பம்
தமிழகத்தில் ரேஷன் அட்டையை பெற சுமார் 2 லட்சம் பேர் தேர்தலுக்கு முன்னே விண்ணப்பித்து இருந்தனர். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டதால் அவர்களுக்கு ரேஷன் அட்டை அந்த சமயத்தில் வழங்கப்படவில்லை. தற்போது அவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த மாதம் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை வழங்கப்பட உள்ளது.
புதிய ரேஷன் அட்டைதாரர்கள் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்
தமிழகத்தில் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் இந்த மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்றால் அவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். என அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதன் காரணமாக சுமார் புதிதாக ரேஷன் அட்டை பெற்ற இரண்டு லட்சம் பேரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த மகளிர் உரிமைத் தொகையைப் பெற விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் விண்ணப்பத்தை பரிசளித்து அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
செப்டம்பர் மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வாய்ப்பு
புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த விண்ணப்பிதாரர்களின் தகவல்களை பரிசீரித்து அவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக புதிதாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மற்றும் மறு விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களுக்கு பெரும் வர பிரசாதமாக உள்ளது. இதன் காரணமாக பெண்கள் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படாது. பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன், இலவச பேருந்து திட்டம், தற்போது மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை பெண்களின் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் செய்து வருகிறது. இதன் மூலம் பலதரப்பட்ட மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.