கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 மே மாதம் எப்போது?
Magalir Urimai Thogai Rupees New Update May14
Magalir Urimai Thogai Rupees New Update May14 தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது .இத்திட்டம் தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாக பெயரிடப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்று அழைக்கப்படுகிறது. ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஆனது அவர்களின் மாதந்தோறும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Magalir Urimai Thogai Rupees New Update May14
இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 6,50,000 பயனாளிகள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் மேல் முறையீட்டு மனுக்கள் வர பெற்றுள்ளதால் அவற்றை பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதற்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கும் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த மாதம் அதாவது மே மாதம் மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் இந்த நிலையில் இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையானது நாளை வரவு வைக்கப்படும் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.