PF முன்பணம் இனி 3 நாள்களில் பெறலாம் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு PF Advance Claim with in 3days Happy News in Tamil  

PF Advance Claim with in 3days Happy News in Tamil  

PF முன்பணம் இனி 3 நாள்களில் பெறலாம் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

இனி பி.எப். முன்பணம் மூன்று நாள்களில் பெறலாம்.தொழிலாளா்களுக்கான பி.எப். முன்பணத்தை மூன்று நாள்களில் பெறும் வகையில் தானியங்கி முறை உருவாக்கப்பட்டுள்ளது. PF Advance Claim with in 3days Happy News in Tamil 

கரோனா பரவலின் போது தொழிலாளா்களின் பி.எப். (வருங்கால வைப்பு நிதி) முன்பணத்தை எளிதாக பெறும் வகையில் தானியங்கி நடைமுறையை பணியாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
PF Advance Claim with in 3days Happy News in Tamil
PF Advance Claim with in 3days Happy News in Tamil

PF Advance Claim

இதன்படி, மருத்துவ செலவுக்காக முன்பணம் கோரி அனுமதிக்கும் போது 3 நாள்களில் பெறமுடியும். தற்போது மருத்துவ தேவை தவிா்த்து கல்வி, திருமணம், வீடுகட்டுதல் போன்ற காரணம் கோரி விண்ணப்பித்தால் 20 நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் அனைத்து விதமான தேவைகளுக்கும் பி.எப். முன்பணம் பெறுவதை தானியங்கி முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழிலாளா்கள் தங்களின் பி.எப். முன்பணம் கோரி விண்ணப்பித்த மூன்று நாள்களில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரி இப்போது பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை எளிதாகத் தெரிந்துகொள்வதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம். அதாவது உங்களுடைய UAN எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் செய்வதன் மூலம் உங்களது இபிஎப் பேலன்ஸை தெரிந்துகொள்ள முடியும். அதாவது 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்.
குறிப்பாக மிஸ்டு கார்டு கொடுத்த சில நிமிடங்களில் எஸ்.எம்.எஸ் வந்துவிடும், அதில் பிஎப் பேலன்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

EPF Balance Check

அதேபோல் உங்களிடம் UAN எண் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருக்கிறது என்றால், அதில் இருந்து எஸ்எஸ்எம் அனுப்புவதன் மூலம் இபிஎப் பேலன்ஸ் தெரிந்துகொள் முடியும். அதாவது உங்களது போனில் இருந்து EPFOHO UAN ENG என்ற வடிவில் 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய உடன் பேலன்ஸ் விவரங்கள் எளிமையாகத் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர www.epfindia.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அங்கு யூஏஎன் (UAN) எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதன்பின்னர் நீங்கள் பிஎப் கணக்கின் மீது கிளிக் செய்து, அதில் View PF Passbook என்பதை கிளிக் செய்தால் உங்களது பேலன்ஸ் எளிதாகத் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக EPFO அமைப்பு அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற அட்வான்ஸ் கிளைம்களை செட்டில் செய்வதற்கான தானியங்கி முறையை (Auto Mode Settlement) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் மனித தலையீடு இல்லாமல் IT அமைப்பு மூலம் கிளைம்கள் அனைத்தும் தானாகவே தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் நோய் சிகிச்சைக்காக கோரப்படும் பி.எப் அட்வான்ஸ்-க்கு விரைவில் செட்டில் செய்வதற்கான ஆட்டோ மோட் வசதி கடந்த ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PF Advance Claim with in 3days Happy News in Tamil
PF Advance Claim with in 3days Happy News in Tamil

PF முன்பணம் இனி 3 நாள்களில் பெறலாம்.

Latest News Click

செல்போன் கட்டணம் 25% உயர்வு வெளியான அதிர்ச்சி தகவல்!!

Leave a Comment