மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
Special Class For Slow Learners 6th to 9th
Special Class For Slow Learners 6th to 9th அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறன் குறைந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை என்னவென்றால், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அரசு பள்ளிகளில் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணித திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறன்களை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இதன் அடிப்படையில் அனைத்து வகை அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எழுதும் திறன் வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணித திறன் குறைவான மாணவ மாணவிகளின் விவரங்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சிகள் இக்கல்விஆண்டிலும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தும் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.