மாதம் ரூ.1400 கட்டினால் உங்களுக்கு ரூ. 35 லட்சம் கிடைக்கும்..! அஞ்சலக திட்டம் விண்ணப்பிக்கும் முழு விவரம்!! Post Office Gram Suraksha Scheme Full Details 2024 Happy News

மாதம் ரூ.1400 கட்டினால் உங்களுக்கு ரூ. 35 லட்சம் கிடைக்கும்..! அஞ்சலக திட்டம் விண்ணப்பிக்கும் முழு விவரம்

Post Office Gram Suraksha Scheme Full Details 2024

Post Office Gram Suraksha Scheme Full Details 2024 மாதம் ரூபாய் 1400 கட்டினால் போதும் உங்களுக்கு ரூபாய் 35 லட்சம் கிடைக்கும் இந்த அஞ்சலக இன்சூரன்ஸ் திட்டத்தை பற்றி நாம் விரிவாக இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஞ்சலகத்தின் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி தெரியுமா ?இதில் யார் யாரெல்லாம் இணைக்கலாம்? எவ்வளவு முதலீடு செய்யலாம்? எவ்வளவு வருமானம் கிடைக்கும்? எப்படி இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைவது போன்ற முமையான விவரங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Post Office Gram Suraksha Scheme Full Details 2024
Post Office Gram Suraksha Scheme Full Details 2024

கிராம சுரக்ஷா திட்டம்

திட்டத்தின் பெயர் கிராம சுரக்ஷா திட்டம் இந்த திட்டத்தின் மூலம் எவ்வாறு நாம் பயன் பெறுவது குறித்து கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அஞ்சலகத்தின் இந்த கிராம சுரக்ஷா திட்டம அரசு ஊழியர்கள், நகர்புற ஊழியர்கள், நகர்புற ஊழியர்கள், கிராமப்புற ஊழியர்களுக்கும் பயனளிக்க கூடிய விதத்தில் வழங்கப்படுகிறது. இது பி எல் ஐ மற்றும் ஆர்பிஎல்ஐ என இரு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் இரண்டாவது திட்டமான ஆர்பிஎல்ஐ கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் இந்த பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம்.

Post Office Gram Suraksha Scheme Full Details 2024

அஞ்சலகத்தின் இந்த கிராம சுரக்ஷா திட்டத்தில் 19 வயது முதல் 55 வயதிலானவர்களுக்கு காப்பீட்டினை வழங்குகிறது. இதில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 10,000 ரூபாயாகும். அதிகபட்ச காப்பீடு என்பது 10 லட்சம் ரூபாயாகும்.

இந்த திட்டத்தில் 4 வருடத்திற்கு பிறகு கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பாலிசியினை மூன்று வருடத்திற்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளலாம். இந்த பாலிசியினை 5 வருடத்திற்கு முன்பு சரண்டர் செய்தால், போனஸ் கிடையாது. இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்த 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகள் வசதிகள் உண்டு. இந்த பாலிசியில் நாமினி வசதியும் உண்டு.

Post Office Gram Suraksha Scheme Full Details 2024

நீங்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட விரும்பினால், இந்தத் திட்டத்தை தாரளமாக தேர்ந்தெடுக்கலாம்.

தனி நபர் ஒருவர் 19 வயதில் 10 லட்சம் ரூபாய்க்கான தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான பிரிமீயம் 1515 ரூபாயாகும். இதே 58 வருடம் எனில் 1463 ரூபாய் பிரிமீயமாக இருக்கும். அதுவே 60 வயதில் 1141 ரூபாயாகவும் இருக்கும்.

55 ஆண்டு திட்டத்தில் முதிர்வு தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும். இதே 58 ஆண்டு திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும். 60 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக முதிர்வு தொகையாக இருக்கும்.எனவே, சிறு முதலீடு மூலம் லட்சக்கணக்கான வருவாயை பெறலாம்.

இது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். கிராம மக்களுக்கானது. கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்தங்கிய மக்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாலிசியை எடுத்து ஐந்தாண்டுகளின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான கூடுதல் அம்சமும் இதில் வழங்கப்படுகிறது. இதற்கான பிரீமியங்களை ஒவ்வொரு மாதமும், காலாண்டும், ஆறு மாதம் மற்றும் ஆண்டு அடிப்படையில் செலுத்தலாம்.

இதில் கடன் வசதி உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், திட்டத்தில் 4 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு மட்டுமே கடன் கிடைக்கும்.அவசர காலங்களில், 30 நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகிறது.முதலீடு செய்த நாளில் இருந்து, பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.5 ஆண்டுகளுக்கு முன்பு சேமிப்பை மூடினால் போனஸுக்கு தகுதியில்லை.

தேவையான ஆவணங்கள்

  1. பான் கார்டு
  2. ஆதார் அட்டை
  3. அடையாளச் சான்றிதழ்
  4. முகவரி ஆதாரம்
  5. வங்கி கணக்கு அறிக்கை
  6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  7. கைபேசி எண்

Post Office Gram Suraksha Scheme Full Details 2024

விண்ணப்ப செயல்முறை

  1.  உங்கள் இடத்திற்கு அருகில் உள்ள தபால் நிலையத்தைப் பார்வையிடவும்  .
  2. கிராம் சுரக்ஷா யோஜனா விண்ணப்பப் படிவத்தைப் பெறுங்கள், ஒவ்வொரு தபால் நிலையத்திலும் கிடைக்கும்.
  3. மேலே குறிப்பிட்டுள்ளபடி, தேவையான தகவலைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  4. பூர்த்தி செய்யப்பட்ட தேவையான அனைத்து விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  5. எதிர்கால குறிப்புக்காக ஒப்புகையை வைத்திருங்கள்.விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் சேமிப்புப் பயணத்தைத் தொடங்க குறைந்தபட்சத் தொகையை நீங்கள் டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டம் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு சேமிப்பில் நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்குகிறது.

Leave a Comment