ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா!- காரணம் என்ன தெரியுமா?
Bank Holidays July Month List 2024
Bank Holidays July Month List 2024 வங்கி விடுமுறைகள் என்பது குறிப்பாக வங்கி ஊழியர்களுக்கு மட்டும் இல்லாமல் வங்கி சேவைகளை நம்பி இருக்கின்ற பொதுமக்களையும் பாதிக்கிறது. எனவே இந்த விடுமுறைகளுக்கு ஏற்ப நம்முடைய வருகைகளை மாற்றி அமைப்பது அவசியம்.
எனவே ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் வங்கி விடுமுறை நாட்களில் படி ஜூலை மாதம் நெருங்கி வருவதால் அந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை நாம் தெரிந்து கொள்வது கட்டாயம் எனவே கீழ்கண்ட தொகுப்பில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஜூலை 3, 2024: ஷில்லாங்கில் உள்ள “Beh Dienkhlam” என்று சொல்லப்படுகிற பண்டிகைக்காக வங்கிகள் மூடப்படும்.0
ஜூலை 6, 2024: MHIP தினத்திற்காக ஐஸ்வாலில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 7, 2024: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
ஜூலை 8, 2024: காங் ரதஜாத்ராவுக்காக இம்பாலில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 9, 2024: காங்டாக்கில் உள்ள வங்கிகள் Drukpa Tshe-zi என்ற பண்டிகைக்காக மூடப்படும்.
ஜூலை 13, 2024: இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஜூலை 14, 2024: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஜூலை 16, 2024: டேராடூனில் உள்ள வங்கிகள் ஹரேலாவுக்கு மூடப்படும்.
ஜூலை 17, 2024: மொஹரம் பண்டிகைக்காக பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். அகர்தலா, அய்ஸ்வால், பேலாப்பூர், பெங்களூர், போபால், சென்னை, ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, ராஞ்சி, ராய்ப்பூர், ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் விடுமுறை.
இருப்பினும், பனாஜி, திருவனந்தபுரம், கொச்சி, கோஹிமா, இட்டாநகர், இம்பால், டேராடூன், காங்டாக், கவுகாத்தி, சண்டிகர், புவனேஸ்வர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் வங்கிகள் சில திறந்திருக்கும்.
ஜூலை 21, 2024: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஜூலை 27, 2024: நான்காவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஜூலை 28, 2024: மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.