Akal Vilakku Project Released For School Girls
பள்ளி மாணவிகளுக்கு வெளியான சூப்பர் திட்டம் அகல் விளக்கு
Akal Vilakku Project Released For School Girls தமிழகத்தில் பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம் கொண்டுவந்துள்ளது. ‘அகல் விளக்கு’குறித்த விபரங்களை நாம் பார்க்கலாம்.
உடல் மணம் சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அகல்விளக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பள்ளி மாணவிகள் பயனடையும் வகையில் இந்த அகல்விளக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 21 ஆம் தேதி ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவையானது ஜூன் 24ஆம் தேதி முதல் மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வித்துறை வருவாய்த்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
Akal Vilakku Project Released For School Girls
அப்போது அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பயனடையும் வகையில் அகல்விளக்கு திட்டம் என்று செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்திருந்தார்.
உடல் மனம் சமூக ரீதியாக உண்டாகும் பல்வேறு இடையூறுகளில் இருந்து மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடுகளும் இன்றி பள்ளிகளுக்கு தொடர்ந்து வருகை புரிவதை உறுதி செய்ய ரூபாய் 50 லட்சம் மதிப்பில் அகல்விளக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது இந்த திட்டத்தின் கீழ் இணையதளத்தை பாதுகாப்பாக கையாள்வது குறித்த வழிகாட்டுதலை வழங்கிட ஆசிரியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.