ரூ.10,000 செலுத்தினால் மட்டும் போதும் மொத்தமா 7 லட்சம் கிடைக்கும்!- இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம் உங்களுக்கு தெரியுமா?..
Post Office RD Scheme Full Details Tamil 2024
Post Office RD Scheme Full Details Tamil 2024 போஸ்ட் ஆபீஸ் இன் மூலமாக நாம் பணத்தை சேமித்து வைத்தால் அது வருங்காலத்தில் பெருகி நமக்கு அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கிறது. எனவே அதில் ஒரு திட்டமான போஸ்ட் ஆபீஸில் தேசிய சேமிப்பு தொடர் வைப்புத்தொகை கணக்கு தொடங்கி நாம் பணத்தை சேமித்து வந்தால் நாம் சிறுக சிறுக சேமிக்கும் பணத்திற்கு ஏற்ப அதிக வட்டி கிடைக்கும் ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இந்த திட்டத்தை நாம் விரும்பினால் மேலும் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக முதலீடு செய்பவர்களுக்கு கடன் வசதியும் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் 6.7 சதவீத வருடாந்திர வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த கணக்கை தனி நபர் கணக்காகவும் தொடங்கலாம் வேறொருவரை நாமினியாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்கள் பெயரில் தேசிய சேமிப்புத் தொடர் வைப்புத்தொகை திட்டத்தில் கணக்கு தொடங்கலாம் ஒரு மாதத்தில் டெபாசிட் செய்யாவிட்டால், ரூபாய் 100-க்கு ரூபாய் ஒன்று வீதம் அபராதம் வசூலிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாம் தேவைப்பட்டால் கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
Post Office RD Scheme Full Details Tamil 2024
அதேபோல் இந்த கணக்கை திறக்கும் நேரத்திலோ அதற்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு சேர்த்து முன்பணமாக டெபாசிட் செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 12 தவணைகள் டெபாசிட் செய்த பின் கணக்கில் உள்ள பணத்தில் 50 சதவீதத் தொகையை கடனாகவும் பெற்றுக் கொள்ளலாம் கடனுக்காக வட்டியாக ஆடி வட்டி விகிதத்துடன் 2 சதவிகிதம் சேர்த்து விதிக்கப்படும்.
தேசிய சேமிப்பு RD கணக்கு தொடங்கி மாதாந்திர டெபாசிட் செய்வதன் மூலமாக முதிர்வு தொகையானது எவ்வளவு கிடைக்கும் என்பதை குறித்து கீழ்க்கண்டவற்றில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
மாதம் 5,000 ரூபாய் டெபாசிட் செய்தால்
உங்கள் மாதாந்திர வைப்புத்தொகை ரூ. 5,000 அல்லது ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ. 300,000 எனில், 6.70 சதவீதம் என்ற விகிதத்தில், உங்களுக்கு ரூ. 56,830 வட்டி கிடைக்கும் மற்றும் முதிர்வுத் தொகை ரூ. 3,56,830 ஆக இருக்கும்.
மாதம் 10,000 ரூபாய் டெபாசிட் செய்தால்
மாதாந்திர வைப்புத்தொகை ரூ. 10,000 என்றால், 5 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ. 600,000. அதற்கு வட்டி ரூ. 1,13,659. எனவே, மொத்தமாக முதிர்வின்போது ரூ. 7,13,659 கிடைக்கும்.
மாதம் 15,000 ரூபாய் டெபாசிட் செய்தால்
மாதாந்திர முதலீடு ரூ.15,000 என்றால், 5 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ. 900,000 ஆக இருக்கும். இத்துடன் ரூ.1,70,492 வட்டியும் சேர்ந்து முதிர்வுத் தொகையாக ரூ.10,70,492 பெறலாம்.
மாதம் 20,000 ரூபாய் டெபாசிட் செய்தால்
மாதம் ரூ.20,000 டெபாசிட் செய்துவந்தால், 5 ஆண்டுகள் கழித்து மொத்த மூதலீட்டுத் தொகை ரூ.12,00,000 ஆகும். இதற்கு வட்டி ரூ.2,27,315. முதிர்வுத் தொகை ரூ.14,27,315 ஆக இருக்கும்.