தமிழக மின்வாரியத்தில் 60,000 க்கும் மேல் காலிப்பணியிடங்கள் முழு விவரம் இதோ…
TNEB 60000 Job Vacancies 2024
TNEB 60000 Job Vacancies 2024 தமிழ்நாடு மின்வாரியத்தில் 60,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்கள் என்ன என்பதை முழுமையாக நாம் இப்போது பார்க்கலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அதற்கான காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் ஏற்கனவே தமிழக மின்சார வாரியத்தில் நீண்ட நாட்களாக உள்ள இந்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.
தமிழக மின்வாரியத்தை பொறுத்தவரை 50 சதவீதத்திற்கும் அதிகமாக காலி பணியிடங்கள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழக மின்வாரியத்தில் 60000 க்கும் மேல் காலிப்பணியிடங்கள்
இந்த தகவல் ஆனது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கடந்த மார்ச் 31 2024 ஆம் தேதியில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 59,864 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொத்தமுள்ள 1,42,208 பணியிடங்கள் உள்ளது இவற்றில் பாதிக்கும் அதாவது 50 சதவீதம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக அறிய முடியாது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இதற்கு முன் ஆட்கள் தேர்வு எப்போது நடந்தது என்றால் 2021 ஆம் ஆண்டில் 9,613 கேங் மேன்கள் தேர்வானது நடைபெற்றது.
அதற்கு முன்பு ஆட்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு TNEB தரப்பில் வெளியிடப்பட்ட போது அப்போதைய நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அனைத்து அரசு பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் TNEB பணியிடங்களுக்கு TNPSC தேர்வு மூலம் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை TNPSC தரப்பில் இருந்து இது தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
TNPSC தரப்பில் இது பற்றி கேட்டபோது தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB தரப்பிலிருந்து காலிப்பணியிடம் குறித்த தகவல்கள் வரவில்லை என்று கூறப்பட்டது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு வாரிய கூட்டத்தில் வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம் அசிஸ்டன்ட் இன்ஜினியர்(AE), ஃபீல்ட் அசிஸ்டன்ட் Field Assistant போன்ற 10,260 பணியிடங்கள் மற்றும் நிரப்ப முடிவு செய்து இது தொடர்பான ஒப்புதல் பெற நிதி துறையை அணுகிய போதும் இதுவரை ஒப்புதல் கிடைக்காத நிலையில் அந்த பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது.
தமிழக மின்சார வாரியத்தின் வேலைக்காக ஒருபுறம் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களும் மறுபுறம் பணி சுமை அதிகரித்து உள்ளது எப்போது பற்றாக்குறை பணியாளர்கள் நிரப்பப்படுவார்கள் என மின்வாரிய ஊழியர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் வருங்காலங்களில் பணியில் இருந்து ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 60,000 அதிகமாக மாற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது அரசு அதிகாரிகள் வேலை தேடும் இளைஞர்கள் பொதுமக்கள் இவர்கள் மூவரையும் பாதிக்கும் வகையில் இருப்பதால் இந்த பணியிடங்கள் விரைவில் நிரப்ப வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் போது இதற்கான தீர்வு உடனடியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விரைவில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.