ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!- ஜூலை மாதத்தில் கூடுதல் பொருட்கள் வழங்கப்படும்!! Happy News For Ration Card Holders More Commodities Will Be Issued in July
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!- ஜூலை மாதத்தில் கூடுதல் பொருட்கள் வழங்கப்படும்!!
Happy News For Ration Card Holders More Commodities Will Be Issued in July
Happy News For Ration Card Holders More Commodities Will Be Issued in July ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் தட்டுப்பாடு நிலவி வருகின்ற காரணத்தினால் பொது மக்களுக்கு சரியான வகையில் சென்றடையாமல் இருக்கிறது. எனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு மே, ஜூன் மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை ஜூலை மாத முதல் வாரத்திற்குள் விநியோகித்து முடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சந்தரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விலைவாசியைக் கட்டுப்படுத்தி, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்துடன் கூடிய உறுதிப்படுத்திடும் நோக்கிலும் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 2007 ஆம் ஆண்டு முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.7381.91 கோடி மதிப்பிலான 7,00,396 மெட்ரிக் டன் பருப்பு மற்றும் ரூ. 7315.96 கோடி மதிப்பிலான 64,62,50,000 பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
தேர்தல் நடைமுறையின் காரணமாக மே 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஜூன் மாதத்தில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனினும், பற்றாக்குறை காரணமாக பலர் பாமாயில், துவரம் பருப்பை பெற முடியவில்லை.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த மே, ஜூன் மாதங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு 2 கோடி பாமாயில் பாக்கெட்கள், தேவையான துவரம்பருப்பு ஆர்டர் செய்யப்பட்டு, அனைத்தும் நியாயவிலை கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
வரும் ஜூலை மாத முதல் வாரத்துக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்பட்டுவிடும் என அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.
ரேஷன் அட்டைதாரர்கள் ஜூன் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை மாதம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.