5 லட்சத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!! Kallakuruchi Kalla charayam latest Update News June 21

5 லட்சத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!!

Kallakuruchi Kalla charayam latest Update News June 21

Kallakuruchi Kalla charayam latest Update News June 21 கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்திருக்கிறது. காவல்துறை இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியதில், பாக்கெட்‌ சாராயம்‌ விற்ற கோவிந்தராஜ்‌ என்கிற கண்ணுகுட்டியை (49) கைது செய்திருக்கிறது. விஷ சாராயம் குடித்தவர்களில் சிகிச்சைக்காக 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

Kallakuruchi Kalla charayam latest Update News June 21
Kallakuruchi Kalla charayam latest Update News June 21

கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சிலர் பலியான நிலையில், இறப்பு நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு கள்ளச் சாராயம் கொடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. கள்ளச் சாராயத்தால் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

இந்த நிலையில், மரக்காணம் கள்ள சாராயம் விவகாரத்தில் உயிரிழக்க காரணமான அதே மெத்தனால், கள்ளக்குறிச்சியின் கள்ளச்சாரயத்திலும் கலந்திருப்பது ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடம் மாற்றப்பட்டும், எஸ்.பி, மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அதிகரித்துவரும் உயிரிழப்புகள் கள்ளகுறிச்சி மாவட்டத்தை பதறவைத்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சமும் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த தொகை அவர்களுக்கு 18 வயது முடியும் வரை நிலையான வைப்பு தொகையாக வைக்கப்படும் எனக் கூறியுள்ள அவர் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment