தமிழகத்தில் ஜூன் 10 பள்ளிகள் திறப்பு!- முதல் நாளே விடுமுறை… ஆசிரியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…
TN RTI Reveals Earned Leave For Teachers In June 10
TN RTI Reveals Earned Leave For Teachers In June 10 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது விடப்பட்டிருந்தது. இதை எடுத்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் மே மாதத்தில் சுட்டரித்த வெயில் காரணமாக பள்ளிக் கல்வித் துறை தேதியை மாற்றி அறிவித்தது. வெளியில் தலை காட்டினால் சுட்டெரிக்கும் வெயிலால் தவிக்கும் நிலை தொடந்ததும் வெப்பமாதம் காரணமாக பல சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக தனது நண்பரின் இறுதி சடங்கிற்கு சென்ற 12 ஆம் வகுப்பு வெயிலின் தாக்கத்தின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஜூன் 6 என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு வெயிலின் கொடுமை இன்னும் குறையவில்லை. எனவே மீண்டும் பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் .அதன் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து ஜூன் 10ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. இதற்கிடையில் வானிலை மாறியது வெயிலின் கொடுமையானது தணிந்து மழை பொட்டு தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் மழைநீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
எனவே இதற்கு மேல் பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கும் வகையில் சென்னை டிவியை வளாகத்தில் இருந்து மாவட்டம் வாரியாக அச்சிடப்பட்ட நோட்டு மற்றும் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் நேரில் வந்து பாட புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
எனவே தற்போது அனைத்து பள்ளிகளிலும் பாட புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளி கல்வித்துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் ஆசிரியர்கள் வெறுப்பு எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
அன்றைய தினம் விடுப்பு எடுக்கக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு என்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட பதிவு மூலம் மேற்கொண்டு கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது. இது தற்போது வரை தொடர்ந்து அமலில் இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
பள்ளி கல்வியினை இயக்குனர் அளித்துள்ள பதிலில் ஒரு ஆசிரியர் முழு ஆண்டு தேர்வு முடிந்து 40 நாட்கள் விடுமுறை கழித்து வரும் முதல் நாள் அல்லது பள்ளி ஆரம்ப நாளில் வரவில்லை எனில் எத்தனை நாட்களுக்கு அவர் இயல் அதாவது ஈட்டிய விடுப்பு எடுக்கலாம் என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஆரம்ப நாளிற்கு மட்டும் ஈட்டிய விடுப்பு அளித்தால் போதும் என்ற பதில் அளிக்கப்பட்டுள்ளது இதுபோல் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் முதல் நாளில் மட்டும் இபி விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.