7360 Guest Lecturers appointment 2024
புதிதாக 7360 கௌரவ விரிவுரையாளர்கள் 25000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்க அறிவிப்பு வெளியீடு
7360 Guest Lecturers appointment 2024 : புதிதாக 7360 கௌரவ விரிவுரையாளர்கள் 25000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்க அறிவிப்பு வெளியீடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில ஷிப்ட் 1-ல் பாடப்பிரிவுகளை நடத்த தேவையான 6,445 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி.
அவர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரம் வீதம் 11 மாதங்களுக்கு தேவையான ரூ.177 கோடியே ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் உரிய ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
25000 தொகுப்பூதியம்
நடப்பு கல்வி ஆண்டில் ஷிப்ட் 1-ல் பாடப்பிரிவுகளை நடத்த வசதியாக 5,699 விரிவுரையாளர்களை மாதம் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 11 மாதங்களுக்கு பணியமர்த்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியும், அதற்கு தேவையான ரூ.156 கோடியே 72 லட்சம் நிதியை ஒதுக்கியும் அரசு ஆணையிடுகிறது. இதேபோல், உயர்கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில்,
ஷிப்ட் 2- நியமிக்க அனுமதி
”நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலைக் கல்லூரிகளில் ஷிப்ட் 2-ல் பாடப்பிரிவுகளை நடத்த தேவையான 1,661 கவுரவ விரிவுரையாளர்களை ரூ.25 ஆயிரம் மாதாந்திர தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி அளித்தும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்தும் அரசு ஆணையிடுகிறது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,000 உதவி பேராசிரியர்களை நிரந்தர பணி
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர்களை நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடத்தப்பட இருந்த போட்டித்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் விவரங்கள்
கௌரவ விரிவுரையாளர்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.