செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க வெறும் 250 போதும்.. பணம் செலுத்த புதிய வசதி இனி கவலை இல்லை!!
Selva Magal Semippu Thittam Online Pay Update 2024
Selva Magal Semippu Thittam Online Pay Update 2024 செல்வமகள் சேமிப்பு முழு விவரத்தையும் அதனுடைய சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதையும் குறித்து இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சுகன்யா சம்பரிதி யோஜனா என்கிற செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன, இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் மாதத்தொகையை எப்படி டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதை குறித்து நாம் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
பெண் குழந்தைகளுக்கான ஒரு சேமிப்பு திட்டமே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும் .அதிக வட்டி வழங்கப்படுகின்ற திட்டம் என்பதால் வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய ஆதரவை இந்த திட்டமானது பெற்று வருகிறது.
நாம் வெறும் ரூபாய் 250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கி விடலாம். அதேசமயம் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை வருடத்திற்கு நீங்கள் மொத்தமாகவும் செலுத்தலாம் அதிகபட்சமாக ஒரு வருடத்தில் ஒரு ரூபாய் 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
அதுபோல் சேமிப்பு கணக்கிற்கு முதிர்வு என்பது கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 வருடங்களில் முடிவு பெறும் .கணக்கு தொடங்கியதில் இருந்து 15 வருடங்கள் மட்டும்தான் சேமிப்பு தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்.
கல்வி செலவு
உங்கள் பெண் குழந்தை 18 வயதில் நெருங்குகின்ற போது அவர்களது கல்வி செலவுக்காக இதன் முதலீட்டிலிருந்து பாதி தொகையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். பெண்ணுக்கு 24 வயது ஆகும்போது அல்லது திருமணத்தின் போது கணக்கில் உள்ள மொத்த தொகையை எடுத்துவிட்டு கணக்கை நீங்கள் மூடிவிடலாம்.
பெண் குழந்தை பிறந்து பத்து ஆண்டுகள் வரை இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும் ஒரு வேளை இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தின் மூன்று பெண் குழந்தைகளுக்கு எண் என்றால் அவர்களுக்கு என்றே விதிவிலக்கு உண்டு.
இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழாக குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூபாய் 250 ஆகும் போஸ்ட் ஆபீஸ்களில் செல்வமகள் திட்ட கணக்கினை தொடங்கலாம் அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகளின் மூலமாகவும் நீங்கள் தொடங்கிக் கொள்ளலாம்.
அதேபோன்று பொதுத்துறை வங்கிகளான SBI போன்ற வங்கிகளின் வெப்சைடுகளிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். தனியார்வங்கிகளான ICICI bank, AXIS bank, HDFC Bank போன்ற வெப்சைடுகளில் இருந்து பெறலாம் அதேபோன்று ஆன்லைன் மூலமாகவும் இந்த கணக்கை ஆக்டிவேட் செய்ய முடியும் இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் மாதத்தொகையை டிஜிட்டல் முறையிலும் செலுத்தலாம் எப்படி அதை செலுத்துவது குறித்து இப்பதிவில் நாம் மேலும் காணலாம்.
ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாகவே பணத்தை நாம் செலுத்த முடியும். எனினும் இதற்கு IPPB என்ற மொபைல் ஆப் வைத்திருக்க வேண்டும். IPPB மொபைல் ஆப் DOP சேவைகள் என்பதை கிளிக் செய்து பிறகு சுகன்யா சம்ரிதி கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை பதிவிட வேண்டும் பைப்பு தொகையை பதிவு செய்த பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வருகின்ற OTP உள்ளிட்டு சமர்பி என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும் ஆன்லைனிலேயே நீங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாத தொகையை எளிதாக செலுத்தி விடலாம்.
வட்டு விகிதம்
ஏப்ரல் ஜூன் வரையிலான காலத்திற்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இப்போது உள்ள 8.2% வட்டியை நீடிக்கும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.